சினிமா செய்திகள்

கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் வேண்டாம்.. அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுங்க.. சிம்புவின் அசத்தல் அட்வைஸ்!

Published

on

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம் என்றும் பெத்த அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு சட்டை, தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் இப்படி எதையாவது வாங்கிக் கொடுங்க என்றும் தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, பிரபு, மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், ரோபோ ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி ரிலீசாகிறது.

பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தின் பேனர்கள் சரிந்து ரசிகர் ஒருவர் பலியானதும் 6 ரசிகர்கள் காயமடைந்த சம்பவமும் திரையுலகை பாதித்துள்ள நிலையில், சிம்பு தனது புதிய வீடியோவில் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

சிம்புவின் உண்மையான ரசிகர்கள் இதனை கேட்பார்களா? அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு இந்த அறிவுரையை வழங்குவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version