இந்தியா

பாகிஸ்தானில் படித்தால் இந்தியாவில் வேலை இல்லை: யூஜிசி அதிரடி அறிவிப்பு!

Published

on

பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து பின் மீண்டும் இந்தியா திரும்பி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் யூஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாகிஸ்தான் நாட்டில் பெற்ற பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் இந்தியாவில் வேலை பார்க்க தகுதியற்றவர்கள் என்றும் அதனால் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு படிப்புக்காக செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது

எனவே உயர் கல்வியை தொடர பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் உயர் கல்வி பட்டம் பெற்றவர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்து இருந்தால் அவர்களுடைய குழந்தைகள் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற்று இந்தியாவில் வேலை தேடுவதற்கு தகுதியுடையவர்கள் என்று யூஜிசி அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version