தமிழ்நாடு

“ஆதிக்க சக்திகளும் அடிமைகளும் காணும் தமிழ்நாடு!”- அதிமுக, பாஜக-வை க்ளோஸ் செய்த திமுக விளம்பரம்

Published

on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி, மாலை 7 மணியோடு அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பரப்புரை முடிய இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என எல்லாவற்றிலும் வீடியோ விளம்பரத்தை வெளியிட்டு வருகின்றன. முதல் சில நாட்களுக்கு அதிமுக, திமுகவை கேலி செய்தும் விமர்சித்தும் சில பிரச்சார காணொலி விளம்பரங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தது.

ஆனால் திமுக, அதிமுகவை விஞ்சும் அளவுக்கு வீடியோ விளம்பரத்தில் முந்தியது. தற்போது திமுக ஒருபடி மேலே போய், இன்றைய செய்தித் தாள்களில் அதிமுக – பாஜகவுக்கு எதிராக முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு கவனம் ஈர்த்து வருகின்றது.

 

Trending

Exit mobile version