தமிழ்நாடு

திமுக அமோக வெற்றி: ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத சீமான், கமல் கட்சிகள்!

Published

on

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்து வந்தது என்பதும் இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் திமுகவுக்கு இணையாக அதிமுகவும் ஓரளவுக்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துப் போட்டியிட்ட பாமக மற்றும் விஜய் மக்கள் இயக்கம் ஆகியவையும் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்து தொகுதிகளிலும் தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஒரு வார்டு கவுன்சிலர் உறுப்பினர் தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவலின்படி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 134 இடங்களிலும் அதிமுக மூன்று இடங்களிலும் மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சில் தேர்தலில் திமுக 861 இடங்களிலும் அதிமுக 137 இடங்களிலும் மற்றவை 109 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த 109 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் 52 பேர்களும், பாமக 33 பேர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version