தமிழ்நாடு

திமுக வசமாகிய பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள்: தேர்தல் முடிவின் முழு விபரங்கள்!

Published

on

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் என்ன என்பதும் ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக முன்னிலையில் இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இறுதி முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் 100% மாநகராட்சிகள் 90 சதவீத பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 434 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றியது. அதிமுக 20 பேரூராட்சிகளையும் மற்றவை 35 பேரூராட்சிகளில் பெற்றுள்ளது.

அதேபோல் நகராட்சியை பொருத்தவரை மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 3 நகராட்சிகளையும் மற்றவை 3 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியை பொறுத்தவரை திமுகவுக்கு 100 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. சென்னை உள்பட அனைத்து 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி அறுதிப் பெரும்பான்மையோடு அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கிட்டத்தட்ட முழு வெற்றியை திமுக பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version