தமிழ்நாடு

கோவையை முழுமையாக கைப்பற்றிய திமுக: அதிமுக, பாஜக அதிர்ச்சி!

Published

on

கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை திமுக முழுமையாக தட்டி தூக்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சி என முழுமையாக திமுக கைப்பற்றியுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, மதுரை, கூடலூர், ஆகிய ஏழு நகராட்சிகளில் அதிமுக, பாஜக செல்வாக்குள்ள பகுதிகளில் அதிக வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டை என்றும் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதி என்றும் கூறப்பட்டதை திமுகவினர் தற்போது பொய்யாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version