தமிழ்நாடு

தனித்து ஆட்சி அமைக்கிறது திமுக: முதல்வராகிறார் ஸ்டாலின்!

Published

on

தமிழகத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் காலையில் இருந்தே திமுக தான் முன்னிலை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

திமுகவை அதிமுக நெருங்கி வந்தது போல் இருந்தாலும் தற்போது அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம் 50ஐ கடந்து விட்டது என்பதால் இனி முடிவுகள் பெரும்பாலும் மாறாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணி தற்போது 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும், அதிமுக கூட்டணி தற்போது 91 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் திமுக மட்டும் தனித்து 117 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தனித்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version