தமிழ்நாடு

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அதிமுக ஒயிட்வாஷ்: மொத்தமாக அள்ளியது திமுக!

Published

on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் திமுக கூட்டணிக்கு 159 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 75 தொகுதிகளும், கிடைத்துள்ளன என்பது தெரிந்ததே. மேலும் தினகரன் கட்சி, கமல் கட்சி மற்றும் சீமான் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று கூறப்பட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 18 தொகுதிகளும், மதிமுக விசிக தலா 4 தொகுதிகளும், சிபிஎம் சிபிஐ தலா இரண்டு தொகுதிகளும், வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிமுக கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுமாரான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 மாவட்டங்களில் அக்கட்சி ஒரு தொகுதியை கூட கைப்பற்றாமல் ஒயிட்வாஷ் ஆனது அக்கட்சியின் தொண்டர்கள் பேரதிர்ச்சியாக உள்ளது.

திமுக வெற்றி பெற்றுள்ள 7 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர்.

seithichurul

Trending

Exit mobile version