தமிழ்நாடு

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி: அதிர்ச்சியில் தலைவர்கள்

Published

on

கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து 1-வது வார்டில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்ற போது கலாராணி போட்டியிடவில்லை என அறிவித்தார். அவருக்கு பதிலாக திமுக சார்பில் 3வது வார்டில் போட்டியிட்ட புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு நிலவியது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மல்லாபுரம் என்ற பகுதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version