தமிழ்நாடு

திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது!

Published

on

17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்த கருத்துக்கணிப்புகள் தான் தற்போது அரசியலிலும் நாடு முழுவதும் முக்கிய பேச்சாக உள்ளது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சொல்லி வைத்தார் போல் மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறது. ஆனால் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தால் முடிவுகள் வேறு மாதிரியாக வரும் என கூறுகிறார்கள். இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக பொதுவாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் அரசியல் வட்டாரத்திலும் சரி, கருத்துக்கணிப்புகளிலும் சரி தமிழகத்தில் மட்டும் திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 35 இடங்கள் வரை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version