தமிழ்நாடு

மதிமுக, விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக மற்றும் பாமக உடன் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று தேமுதிக பாமக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கட்ட பேச்சு வார்த்தை முடித்து விட்ட திமுக, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் கூட்டணி குறித்து திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்த இரு கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து நாளை மாலைக்குள் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் வேண்டும் என்றும் தங்களது சொந்த சின்னங்களில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன

ஆனால் மதிமுக விசிக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா நான்கு தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் அந்த நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவு நாளைய பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version