தமிழ்நாடு

தமிழகத்தை மீட்க அதிமுக-வை வெளியேற்றுவோம்..!- கர்ஜித்த ஸ்டாலின்

Published

on

தமிழகத்தை மீட்க விரைவில் ஆட்சி அரியணையில் இருந்து அதிமுக-வை விரட்டுவோம் என திமுகம் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல அரசியல் கட்சிகளும் தங்களது பிரசாரப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதிமுக அரசை ஒழித்து திமுக ஆட்சியைப் பிடிக்கும் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் ஸ்டாலின் ‘தமிழகம் மீட்போம்’ நிகழ்ச்சியின் மூலம் தொண்டர்களிடம் பேசுகையில், “தமிழகத்தை மீட்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு ஏற்றாற்போல் திமுக தொண்டர்கள் உழைக்கத் தொடங்க வேண்டும். அதிமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பாஜக செய்த துரோகங்களை மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். தமிழக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தை மீட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு அடுத்து #தமிழகம்_மீட்போம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version