தமிழ்நாடு

திமுக, அமமுகவுக்கு ஆதரவு கொடுத்துதான் ஆக வேண்டும்: அதிமுக ஆட்சியை நீக்க திட்டம்!

Published

on

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமமுகதான் வெற்றிபெறும். அதன் பின்னர் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது திமுகவும் நாங்களும் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.

மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு 34 எம்எல்ஏக்கள் தேவை. எங்களிடம் போதிய எம்எல்ஏக்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் ஆட்சியைக் கலைக்க திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்துதான் ஆக வேண்டும். அப்படி கொடுக்கவில்லை எனில் திமுக எங்களைக் கண்டு பயப்படுவதாகத்தான் அர்த்தம். அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால் பொதுத் தேர்தல் வரும். அப்போது அமமுக வெற்றிபெற்று அம்மா ஆட்சியைக் கொடுக்கும். ஆனால், திமுக ஆட்சியமைக்க அமமுக ஆதரவு தராது என்றார்.

seithichurul

Trending

Exit mobile version