தமிழ்நாடு

இனிமேல் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டோம்: ஆர்.எஸ்.பாரதி

Published

on

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் திமுக எடுத்து வருவதாக அக்கட்சியின் மீது அதிமுக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எதிர்க் கட்சியாக இருக்கும்போது அதிமுக அரசு ஊரடங்கின் டாஸ்மாக் கடைகளைத் திறந்த போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை திறந்தததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேபோல் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு தொகுப்பு பொருள்களுடன் 2500 ரூபாய் அதிமுக அரசு வழங்கிய போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என போராட்டம் செய்தது திமுக என்பது குறிப்பிட தக்கது. ஆனால் திமுக ஆளுங்கட்சியான பின்னர் 2,500 ரூபாயும் தராமல் பொங்கல் பொருட்களை மட்டுமே தற்போது தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் விரைவில் அடுத்த மாதம் பிரதமர் மோடி வரும் போது கறுப்புக்கொடி காட்ட மாட்டோம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் கூறியபோது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்புக்கொடி காட்டியது உண்மைதான் என்றும், அப்பொழுது எங்களுடைய கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும், தமிழர்களுக்கு எதிரான செயல்களைச் செய்ததால் எதிர்த்தோம் என்றும் கூறினார்.

ஆனால் தற்போது எங்களுடைய கோரிக்கைகளை மோடி ஆதரிக்கிறார் என்றும், எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்திருக்கிறார் என்றும், நாங்கள் மோடிக்கு எதிரி அல்ல இந்துத்துவத்திற்கு தான் எதிரி என்றும், எனவே தற்போது பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்ட மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியை அழைத்தது நாங்கள்தான் என்றும் நாங்களே அழைத்துவிட்டு நாங்களே எப்படி கருப்பு கொடி காட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version