தமிழ்நாடு

திமுக அவசரப்பட்டு ஆட்சியை கவிழ்த்தால் காத்திருக்கும் பெரிய ஆப்பு!

Published

on

அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை திமுக எப்போது கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் என்பது தான். ஆனால் இதில் திமுக அவசரப்பட்டால் ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நடந்து முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அல்லது அதிமுக மெஜாரிட்டியை இழந்து ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக 9 இடங்களில் வென்று மயிரிழையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இருந்தாலும் திமுக நம்பர் கேம் விளையாடி ஆட்சியை கவிழ்க்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கான வேலைகளிலும் திமுக முழுமையாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அப்படி ஒருவேளை திமுக அவசரப்பட்டு உடனடியாக அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுகவுக்கு மூன்று எம்பிக்கள் வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. இதனால் வைகோ உள்ளிட்டோர் எம்பியாக முடியாத சூழல் ஏற்படும். வரும் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் வருகிறது. அதில் உறுதியாக மூன்று எம்பிக்கள் திமுகவுக்கு கிடைக்கும். உடனடியாக திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் ராஜ்ய சபா எம்பிக்களைப் பெறும் வாய்ப்பு பறிபோகும். எனவே ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை திமுக ஆட்சியை கவிழ்ப்பதில் அவசரம் காட்டாது என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version