தமிழ்நாடு

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published

on

வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட உள்ள இரண்டு பேர் கொண்ட பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லக்ஷ்மணன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலத்தின்படி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில் இரண்டு இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கும் ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version