தமிழ்நாடு

கருத்துக்கணிப்பால் அலட்சியம் வேண்டாம்: முக ஸ்டாலின் டுவீட்

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கூறிவருகின்றன.

நேற்று டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 177 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 49 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மீண்டும் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒவ்வொரு திமுக தொண்டர்களின் முகத்திலும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருத்துக் கணிப்புகள் நமக்கு சாதகமாக இருந்தாலும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம் என்றும் அதனால் அலட்சியம் இன்றி பணியாற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம். ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன்! தோழமைகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். முழு வெற்றியைச் சிதறாமல் அறுவடை செய்வோம்.

Trending

Exit mobile version