தமிழ்நாடு

தமிழக ஆளுனரை திடீரென போற்றி புகழ்ந்து வாழ்த்திய முக ஸ்டாலின்!

Published

on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திடீரென போற்றிப் புகழ்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும், கவர்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

”தமிழகத்தின் மீதும் – தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் அவர்கள் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் – நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.”

”அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க – ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து – தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.”

தமிழகத்தில் அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறிவரும் நிலையில் ஆட்சி அமைத்தவுடன் கவர்னரின் ஒத்துழைப்பு தேவை என்பதால் அவரை போற்றி புகழ்ந்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version