தமிழ்நாடு
திமுகவின் புதிய ஐடி விங் செயலாளர் அறிவிப்பு: பிடிஆர் ராஜினாமா ஏற்பு!
திமுகவின் ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஐடி விங் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஒரு தலைவர், செயலாளர் மற்றும் குழுக்களை நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஐடி விங் மிகவும் சுறுசுறுப்பாக இணையதளங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுகவின் ஐடி விங் செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக மதுரையை சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இருந்தார் என்பதும் அவரது தலைமையில் சிறப்பாக ஐடிவிங் செயல்பட்டதாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவரது ராஜினாமாவை திமுக தலைமை ஏற்று கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுகவின் புதிய ஐடி விங் செயலாளர் செயலாளராக டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திமுக அணி அயலக செயலாளராக எம்எம் அப்துல்லா எம்பி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.