இந்தியா

திருக்குறள் சொல்லி மோடி, மத்திய அரசுக்கு அறிவுரை சொன்ன தமிழக எம்.பி., – மாநிலங்களவையில் மெய்சிலிர்க்க வைத்தப் பேச்சு

Published

on

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கூட்டத் தொடரில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசிய இளங்கோ,

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். விவசாயம் செய்து வாழ்பவர்களே உண்மையாக வாழ்பவர்கள். மற்றவர்கள் விவசாயத்தை நம்பி இந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்று இந்தக் குறள் சொல்கிறது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று சொல்கிறார் வள்ளுவர். வேளாண் சட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பு கருத்துகளையும் மத்திய அரசு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மாநில சுயாட்சிக்கு வலுசேர்க்க வேண்டும்

அப்படி கேட்காத அரசுக்காகவே வள்ளுவர் இன்னொரு குறளைத் தெரிவித்துள்ளார். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்கிறார். ஒரு ராஜா, மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடக்கவில்லை என்றால், அவன் தானா வீழ்வான் என்கிறது. எனவே, வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று மோடி அரசை வலியுறுத்துகிறேன்’ என உரையாற்றினார்.

seithichurul

Trending

Exit mobile version