தமிழ்நாடு

மீண்டும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: திமுக எம்.எல்.ஏ கண்டனம்

Published

on

10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் 35 மதிப்பெண்கள் வழங்கப்பட்டாலும் அதிக மதிப்பெண்கள் தேவை என்று விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் மாநில அரசால் நடத்தப்படும் பொது தேர்வு எழுத வேண்டும் என்றும், அந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது

இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

என்ன அநியாயம் இது!
யார் இந்த முடிவை எடுத்தது?
நம்முடைய மாணவர்கள் என்று நினைக்கிறீர்களா அல்லது ஏதோ விளையாட்டு பொம்மைகள் என்ற எண்ணமா?
உங்கள் குழப்ப விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?
குதிரை கீழே தள்ளியதுமில்லாமல் குழியும் பறிக்கிறதே.

seithichurul

Trending

Exit mobile version