தமிழ்நாடு

“கிறுக்குப் பய சுமந்த் ராமன்…”- வரிந்துகட்டிய திமுக எம்எல்ஏ பி.டி.ஆர் #ViralVideo

Published

on

பல்துறை நிபுணராக அறியப்படும் சுமந்த் ராமனை திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தியாகராஜன், கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

பொருளாதாரம், அரசியல், விளையாட்டு என பல துறைகள் குறித்து தொடர்ந்து உரையாடி வருபவர் சுமந்த் ராமன். அவரது அரசியல் நிலைப்பாடுகள் பல நேரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, அவர் அதிமுக மற்றும் பாஜகவின் ஆதரவாளர் என்று பலர் விமர்சிப்பது உண்டு.

அவருக்கும் மதுரை திமுக எம்.எல்.ஏ-வான பி.டி.தியாகராஜனுக்கு எப்போதும் மோதல் போக்கு நிலவி வரும். இருவரும் பல விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் முட்டி மோதிக் கொள்வார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தான் கொடுத்த பேட்டி ஒன்றில் தியாகராஜன், ‘தமிழ்நாட்ல இங்க ஒரு அறிவாளி இருக்காரு. கிறுக்குப் பய ஒருத்தரு டாக்டர் சுமந்த் ராமன்னு. எல்லா சப்ஜெக்ட்லயும் எதோ மேதை மாதிரி. எல்லாத்திலயும் அரைகுறைதான். வடிகட்டனு நபரு’ என கொதித்துள்ளார்.

இதற்கு சுமந்த் ராமன், ‘நான் என்ன சொல்கிறேன் என்பது குறித்து ஏன் இவர் இவ்வளவு கோபப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்க மாட்டேன். நான் சொல்வதை முழுவதும் மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், எதற்கு இவ்வளவு வன்மம்? நான் சொல்வதில் அர்த்தமில்லை என்று மக்கள் நினைத்தால், அவர்கள் என்னை நிராகரிக்கட்டும்’ என்று மட்டும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version