தமிழ்நாடு

கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்: கட்சியினர்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

Published

on

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில பேச்சாளர்கள் கண்ணியக் குறைவாக பேசுவதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக திமுகவை சேர்ந்த ராசா மற்றும் லியோனி ஆகியோர் சமீபத்தில் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது என்பதும் இதுகுறித்த வீடியோக்களும் பரவி வரும் நிலையில் திமுக பிரமுகர்களே இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியின் பேச்சாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். தேர்தல் பரப்புரையில் திமுகவினர் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது என்றும், திமுகவினர்களின் பேச்சை திரித்து, வெட்டி, ஒட்டி தவறான பொருள்படும் வெளியிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

திமுக உறுப்பினர்கள் மக்களிடையே பரப்புரை செய்யும் போது மரபையும் மாண்பையும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கு முன் வெற்றிக்கான பாதை முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்தி விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சு சர்ச்சைக்குள்ளானது கொடுத்த விளக்கம் அளித்துள்ள ஆ ராசா, ‘தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவதூறு செய்யும் வகையில் பேசவில்லை என்றும் தனது பேச்சு வெட்டி ஒட்டி திரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version