தமிழ்நாடு

ஶ்ரீரங்கம் கோயில் முன்னர் நடந்த திமுக பிரச்சாரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்; வைரல் புகைப்படம்!

Published

on

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருச்சியில் உள்ள பிரபல ஶ்ரீரங்கம் கோயில் முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெருந்திரளான மக்கள் கூடினார்கள். இது குறித்தான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஶ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், மக்கள் பெருந்திரளாக கூடியுள்ளது ஆளுந்தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ‘இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல உயர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்தியில் இருக்கும் ஆட்சியும் – மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறி மாறி வரியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அதைவிடக் கொடுமையானது, இப்போது ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட மோசமான ஆட்சி ஒன்று இருக்கவே முடியாது.

இந்த லட்சணத்தில் பழனிசாமி அடிக்கடி, மக்களைக் குழப்பி வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் பொய் சொல்லி சதி செய்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார்.

மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எப்போது ஆறாம் தேதி வரப்போகிறது? எப்போது இந்த ஆட்சியை ஒழிக்கப் போகிறோம்? என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்’ எனப் பேசினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version