தமிழ்நாடு

நீட் பாதிப்பு குழு வழக்கில் எங்களையும் சேர்க்க வேண்டும்: 3 அரசியல் கட்சிகள் மனு!

Published

on

நீர் பாதிப்பு குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழகத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் தமிழக அரசுக்கு நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த குழு, தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த குழு குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு குழு அமைத்து உள்ளதாகவும், இந்த குழு செயல்பட அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு சற்றுமுன் பதில் அளித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் நீட் பாதிப்பு குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக மற்றும் திக ஆகிய மூன்று கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version