தமிழ்நாடு

கல்விக்கடன் ரத்து: இளைஞர்களை கவரும் திமுக தேர்தல் அறிக்கை!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை கவரும் விதத்தில் பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும், ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பிருந்தது போல் குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திலும் பழைய நடைமுறை கொண்டுவரப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். மாணவர்களுக்கு இலவச ரயில் பயணங்கள் அளிக்கப்படும். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துவோம். உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version