தமிழ்நாடு

தபால் வாக்குகள் எண்ணிக்கை: திமுக முன்னிலை

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் சற்றுமுன்னர் என்ன தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தான் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு தேர்தலிலும் தபால் வாக்குகளை பொறுத்தவரையில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதால் இதை வைத்து மொத்த முடிவுகளை கணிக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தபால் வாக்குகளின் அடிப்படையில் திமுக 14 இடங்களிலும் அதிமுக மூன்று இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முக ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல் கேரளாவில் இடதுசாரி முன்னணி முன்னிலை வகித்து வருகிறது என்றும், அசாமில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசை விட பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version