தமிழ்நாடு

128 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி: ஆட்சி அமைக்க வாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணி 128 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 106, காங்கிரஸ் 8, மதிமுக 4, விசிக 4, சிபிஎம் 3, சிபிஐ 2 மற்ற கட்சிகள் ஒன்று என முன்னிலை வகித்து வருகின்றன.

இதேபோல் அதிமுக கூட்டணிக்கு 92 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக 78, பாமக 11, பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இருப்பினும் இது ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம் தான் என்பதும் மதியம் 3 மணிக்கு மேல் தான் கிட்டத்தட்ட ஆட்சி அமைப்பது யார் என்பது உறுதியாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் உதவியால் ஆட்சி அமைக்க வாய்ப்பை பெற்றுள்ளது என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version