தமிழ்நாடு

எச்.ராஜா, துரைமுருகன், பிரேமலதா, ராஜேந்திர பாலாஜி, குஷ்பு பின்னடைவு!

Published

on

உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ஊடகங்கள் கூறிய பல பிரபலங்கள் தற்போது பின்னடைவில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக காரைக்குடி தொகுதியில் ஹெச் ராஜா பின்னடைவில் உள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் மூவாயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் திமுகவின் முக்கிய வேட்பாளரான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின்னடைவில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ராஜபாளையம் தொகுதியில் போட்ட்யிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக வேட்பாளரை விட சுமார் ஆயிரம் வாக்குகள் பின் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 9371 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முன்னிலையில் உள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்ட வைகை செல்வன் பின்னடைவு

சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை. இந்த தொகுதியில் போட்டியிட்ட சைதை துரைசாமி பின்னடைவு

கொளத்தூர் தொகுதியில் 3 சுற்றுகளின் முடிவில் 5968 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனை விட கடம்பூர் ராஜூ 2,513 ஓட்டு முன்னிலையில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version