தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது: திமுக நிர்வாகிகள் பேட்டி

Published

on

தேர்தல் ஆணையம் மீது படிப்படியாக நம்பிக்கை குறைவதாக திமுக நிர்வாகிகள் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையை திமுக நிர்வாகிகளான ஆர்.எஸ்.பாரதி, ஆ ராசா , பொன்முடி ஆகியோர் சந்தித்து ’வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் லாரிகள் சென்று வருவதாகவும் புகார் அளித்தனர்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரன்க்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் போதிய அளவு கழிவறைகள் இருக்கும் நிலையில் மொபைல்கள் கழிவறைகளுக்கு என்ன அவசியம் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை சற்று முன்னர் திமுக நிர்வாகிகளான ஆர்எஸ் பாரதி, ஆ ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவது ஏன் என்றும் கூறினார்கள்., இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version