தமிழ்நாடு

தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின்!

Published

on

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதித்து நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

கொரோனா தொற்று குறையாத சூழலில் கிராம சபை கூட்டம் நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் தமிழக அரசு இந்த முடிவை எடுப்பதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்த வல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில், கொரட்டூர் ஊராட்சி புதுச்சித்திரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளைக் கேட்டறிந்தார்.

ஒவ்வொரு ஆண்டும், காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி, நாடு முழுவதும் கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.

முன்னதாக தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம், இந்த கொரோனா காலத்தில் எப்படி நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருந்தது. அதன்படி கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. கிராம சபைக் கூட்டத்தைப் பொதுவெளியில், காற்றோட்டமான பகுதிகளில் நடத்திக்கொள்ளலாம். கூட்டத்திற்கும் முன்பும், பின்பும் அந்த பகுதியைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில், கிராம சபை கூட்டம் நடத்துவதில் இருந்து பின்வாங்கியது. இதை கடுமையாக விமர்சித்த திமுக, புதிய வேளான் சட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் தான் தமிழக அரசு கிராம சபைக் கூட்டத்திற்குத் தடை விதித்துள்ளது என்றும் விமர்சித்தது.

இந்நிலையில், அரசு விதித்த தடையை மீறி, மு.க.ஸ்டாலின் கிராம சபைக் கூடத்தை நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version