இந்தியா

பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணி: திமுக இணையுமா?

Published

on

பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணியில் திமுக இணையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் ஒரு பலமான அணி அமைய வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய அணையை அமைக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக நேற்று சரத்பவார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தம் தாக்கரே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் புதிய அணி குறித்து கிட்டத்தட்ட ஒரு முடிவெடுத்தார்கள். அந்த முடிவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பா பல தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவுடன் கூட்டணியில் இருக்கும் திமுக, பாஜக-காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் இணையும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணியில் திமுக இணைய முடிவு எடுத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் நிலை என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version