இந்தியா

எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க திமுக காரணமா?

Published

on

நேற்று மத்திய அமைச்சரவை புதிய பட்டியல் வெளியான நிலையில் 43 புதிய அமைச்சர்கள் யார் யார் என்பதைப் பார்த்தோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களுக்கும் அமைச்சர் பதவியில் இடம் கிடைத்திருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எல் முருகனுக்கு மட்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் உலவி வருகிறது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எல் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரை திமுகவின் கயல்விழி தோற்கடித்தார். அதுமட்டுமின்றி எல் முருகனை தோற்கடித்ததற்காக அவருக்கு ஆதிதிராவிட நல அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

எல் முருகனை அவமதிக்கும் வகையில் திமுக கயல்விழிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவை மூக்கறுக்கும் வகையில் எல் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டுமென பாஜக தலைமை முடிவு செய்தது என்று கூறப்படுகிறது. இதனால் எல் முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஒருவகையில் திமுகவே காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடியை சந்தித்த போது எல் முருகனை மட்டும் டெல்லியிலேயே இருக்கும்படியும் அமிர்ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பது முந்திய நாள் வரை தெரியாது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் 43 அமைச்சர்கள் பட்டியல் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் அமைச்சர் பட்டியல் வெளியாகும் வரை சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகர்களுக்கே புதிய அமைச்சர்கள் யார் என்பது தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் தம்பிதுரை அல்லது ரவீந்திரநாத் ஆகிய இருவரில் ஒருவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்க திட்டமிட்டதாகவும் ஆனால் அதிமுகவில் இரண்டு கோஷ்டிகள் இருப்பதால் ஒரு கோஷ்டிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் இரண்டாவது கோஷ்டியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் அந்த திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு இணை அமைச்சர் பதவி தருவதற்கும் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version