தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்று மீண்டும் அழைப்பு: உடன்பாடு ஏற்படுமா?

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணி குறித்து தொகுதி உடன்பாடு பேசுவதற்காக நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும், தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும், பொது தொகுதிக்ள் வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்ததாகவும், அந்த நிபந்தனைகளுக்கு திமுக ஒப்புக் கொள்ளாததால் நேற்று விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக தரப்பில் இருந்து மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் இந்த அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இரட்டை இலக்க தொகுதிகள் மற்றும் தனிச்சின்னம் ஆகியவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருப்பதால் இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் கிட்டத்தட்ட விடுதலை சிறுத்தைகள் நிலைமையில் தான் மதிமுகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version