இந்தியா

இந்தியாவிலேயே திமுகவுக்கு தான் முதலிடம்: தேர்தல் ஆணையத்தின் தகவல்

Published

on

இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட பிராந்திய கட்சிகளின் திமுக முதல் இடம் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரிய வருகிறது

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளின் ஆண்டு வருமானம் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியானது

மொத்தம் 31 மாநில கட்சிகளில் கடந்த 2020 – 21 ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெற்ற கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. திமுக மற்றும் மற்ற கட்சிகள் 2020 – 21 ஆம் ஆண்டில் பெற்றவருமான குறித்த தகவல் இதோ;

2020 – 21 ஆம் ஆண்டில் திமுகவின் வருவாய் ரூ.149.95 கோடி. ஆட்சிக்கு வருவதற்கு முன் ரூ.64.90 கோடி ஆக இருந்த வருமானம் ஆட்சிக்கு வந்த பின்னர் 131 சதவீதம் உயர்ந்துள்ளது

2020 – 21 ஆம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.107.99 கோடி

2020 – 21 ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளம் கட்சியின் வருமானம் ரூ.73.34 கோடி

2020 – 21 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியின் வருமானம் ரூ.54.76 கோடி

2020 – 21 ஆம் ஆண்டில் அதிமுகவின் வருமானம் ரூ.42.36 கோடி. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.89 கோடி வருமானம் ஈட்டியது.

2020 – 21 ஆம் ஆண்டில் ம.தி.மு.கவின் வருமானம் ரூ.2.86 கோடி

2020 – 21 ஆம் ஆண்டில் பா.ம.கவின் வருமானம் ரூ.1.16 கோடி

 

seithichurul

Trending

Exit mobile version