தமிழ்நாடு

கமல் கட்சியில் இருந்து திமுக சென்ற டாக்டர் மகேந்திரனுக்கு முக்கிய பதவி: துரைமுருகன் அறிவிப்பு!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற டாக்டர் மகேந்திரனுக்கு திமுக தலைமை முக்கிய பதவி ஒன்றை கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பத்திலிருந்து அவருக்கு உறுதுணையாக இருந்து துணை தலைவர் பதவியையும் ஏற்று வந்தவர் டாக்டர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் டாக்டர் மகேந்திரன் போட்டியிட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து அவர் கமல்ஹாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியிலிருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அவருடன் கமல் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு முக்கிய பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி திமுகவின் தகவல் தொழில்நுட்ப இணை செயலாளராக டாக்டர் மகேந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version