தமிழ்நாடு

கூடுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்.. ஸ்டாலினின் முடிவு என்ன? அழகிரியின் திட்டம் என்ன?

Published

on

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

திமுக கட்சியில் அடுத்த பெரிய திருப்பம் நடக்க உள்ளது. அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு நடைபெறும். க. அன்பழகன் கூட்டத்தை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும். திமுக தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பொருளாளர் யார் என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.

இது பொதுக்குழு கூட்டத்தில் பெரிய புயலை கிளப்பும் எனப்படுகிறது. அழகிரி ஏற்கனவே பொருளாளர் பதவியை கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version