தமிழ்நாடு

பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை: அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு

Published

on

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மணி நேரங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் முன்னிலை நிலவரங்களில் திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக உள்பட எந்த கட்சியும் இதுவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லாததால் அக்கட்சிகளுக்கு பின்னடைவு என கருதப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார் அதேபோல் பொள்ளாச்சி மாவட்டம் தென் குமாரபாளையம் உள்ளாட்சி தலைவர் இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர் முன்னிலை
வகிக்கின்றார்.

தென்காசி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 1வது வார்டில் திமுக வேட்பாளர் சந்திரலீலா முன்னிலை வகிக்கின்றார். இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்., உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாத தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிப்பு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version