தமிழ்நாடு

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? முக ஸ்டாலின் தகவல்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. இரு கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெற்று, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கின்றன என்பதும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இலட்சிய பிரகடனமும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 10ஆம் தேதி வெளியாகும் திமுகவின் வேட்பாளர் பட்டியலில் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version