தமிழ்நாடு

கோவை ஆட்சியருக்கு பகிரங்க மிரட்டல்விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: திமுக புகார்

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.

இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சிலர் அவரை வெளிப்படையாக மிரட்டினார்கள். இது குறித்த காணொலிக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ:

நேற்று முன் தினம் அதிமுக கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ‘எங்கள் புரட்சித் தலைவி ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர் தான். அப்படி இருக்கையில் சிறைவாசத்துக்காக நாங்கள் அஞ்ச மாட்டோம். நான் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன். எங்கள் தொண்டர்கள் மீது மட்டும் கை வைக்காதீர்கள்’ என்று கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்னர் ரெய்டு நடந்தது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவினர், சூலூர் பகுதி காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியரை, அதிமுகவினர் மிரட்டியதாக குற்றம் சாட்டி புகார் கொடுத்து உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version