தமிழ்நாடு

தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே: திமுக தேர்தல் அறிக்கை!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

பெண்கள் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும்

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும், உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்

மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவர்

பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்படும்

தமிழ்நாட்டு வேலைகளில் 70% தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்

அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்

புதிய நீர் வள அமைச்சகம் உருவாக்கப்படும்

னவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை

வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்

8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் ஆக்கப்படும்

ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை

வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோ வாங்க ரூ.10000 மானியமாக வழங்கப்படும்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000

பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்

ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்

பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்

சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version