தமிழ்நாடு

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி..!

Published

on

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு லேசாக காய்ச்சல் அடிப்பதாக உணரப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காட்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு இன்று பேசி வந்தார் துரைமுருகன். அப்போது காய்ச்சல் அடிப்பது போல் உணரப்பட்டதால் ஆற்காடு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேல்விஷ்ராம் கே.ஹெச். அப்போலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை சீரான நிலைக்குத் திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version