தமிழ்நாடு

பாஜக வெற்றி பெற்ற வார்டில் டெபாசிட் இழந்த திமுக வேட்பாளர்!

Published

on

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதிமுக சுமாரான வெற்றியைப் பெற்ற போதிலும் முதல் முறையாக தனித்து போட்டியிடும் பாஜகவும் ஓரளவு வெற்றியை பெற்று வருகிறது.

திமுக ஆதரவு ஊடகங்கள் #ஒத்தஓட்டுபாஜக என பாஜகவை கேலியும் கிண்டலும் செய்து செய்திகள் வெளியிட்டாலும் உண்மையில் நோட்டாவுடன் ஒப்பிடப்பட்ட பாஜக ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றும், அந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்பதைத் தான் இந்த வெற்றி காட்டுகிறது என நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் குண்டடம் 9வது வார்டில் 13 கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட திமுக வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் மூன்று மணிவரை வந்த தகவலின்படி மாநகராட்சியில் 5 வார்டுகளிலும், நகராட்சியில் 42 வார்டுகளிலும், பேரூராட்சியில் 175 வார்டுகளிலும் என மொத்தம் 222 வார்டுகளில் தாமரை மலர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாஜகவினர் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version