தமிழ்நாடு

காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி: இன்று இறுதி செய்ய திமுக முடிவு!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு 20 முதல் 24 தொகுதிகள் முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் வலது கம்யூனிஸ்ட் மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

இந்த உடன்பாட்டுக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இன்றுக்குள் பேச்சு வார்த்தை முடித்து அந்த கட்சிகள் கூட்டணிகள் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கூட்டணி தொகுதிகள் முடிவு செய்தபின் வேட்பாளர் தேர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்பதுமே திமுகவின் திட்டமாக உள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருப்பதால் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க திமுக நிர்வாகிகளை முடுக்கிவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்று காங்கிரஸ், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

Trending

Exit mobile version