தமிழ்நாடு

திமுக காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Published

on

நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி, திமுக அரசை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என திமுக எம்பிக்களைப் பார்த்து கூறினார். இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் தொடர் கோஷங்களுக்கு மத்தியில் அவர்களை விமர்சித்து பேசினார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்களின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ். இதனால் எம்.ஜி.ஆர் ஆன்மா வருத்தத்தில் இருக்கும். 386 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது.

சரத் பவாரின் அரசும் கவிழ்ந்தது. என்.டி.ஆர் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முயற்சிகள் நடந்தன. இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளீர்கள். திமுகவினர் இதை மறக்கக்கூடாது என ஆவேசமாக திமுக எம்பிக்களை பார்த்து கூறினார் பிரதமர் மோடி.

இந்நிலையில், உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், திமுக ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என பிரதமர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சியைக் கவிழ்த்த அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கிறவர்கள் இதை கேட்கலாமா? என பதிலடி கொடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version