தமிழ்நாடு

ஒரே முகவரியில் 50 வெளிமாநில வாக்காளர்கள்: அமைச்சர் வேலுமணி தொகுதியில் பரபரப்பு!

Published

on

ஒரே முகவரியில் 50 வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்த 50 வாக்காளர்களும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் வேலுமணி தொகுதியில் வெளிவந்துள்ள புகார் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு உண்டான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலை சரிபார்த்து முடித்துவிட்ட தேர்தல் ஆணையம், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யும் பணியில் உள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் போது எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 50 வெளி மாநில வாக்காளர்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர் வேலுமணியின் தலையீட்டால் வாக்காளர் பட்டியலில் முறை நடந்துள்ளதாகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஒரே முகவரியில் எப்படி 50 வாக்காளர்கள் இருக்க முடியும், அதுவும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் எப்படி இருக்கமுடியும்? என்று திமுக கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version