தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்!

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு வலது தொடைப் பகுதியில் இருந்த நீா்க்கட்டியை அகற்ற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியிடப்ப்பட்டது.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும் ஸ்டாலின் சில தினங்கள் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டாா் என்று திமுக தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version