தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது மகனும் திமுக செயல் தலைவருமாக இருந்த மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆளும் அதிமுக அரசு மீது முன்பு இல்லாததைவிட மிகவும் அதிக கோபம் காட்டுகிறார்.

தொடர்ந்து அறிக்கைகள், போராட்டங்கள் மூலம் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், சிகிச்சைக்கு பின்னர் இன்று காலையில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version