தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம்: தடுக்க தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published

on

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலையிலிருந்தே திமுக தான் முன்னிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக கூட்டணி 148 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் திமுக கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டது என்றே கூறலாம்.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைய போவதை அடுத்தும், முக ஸ்டாலின் முதல்வராக போவதை அடுத்தும் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னை அண்ணா ஆலயத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வரும்போது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடியதை தடுக்க தவறிய காவல்துறை ஆய்வாளர் முரளி அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version