தமிழ்நாடு

மேலும் ஒரு திமுக வேட்பாளருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற செய்தியையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், திருவள்ளூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் குரு உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி திமுக வேட்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவர் ஆன்லைன் மூலமும் யூடியூப் வீடியோ மூலம் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் தேதி அன்று அவர் கொரோனா கிட் அணிந்து தனது வாக்கை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version